சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி - மாணவ மன்றம் துவக்கவிழா மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விசாலையன் கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 7- ஆம் மாணவர் மன்றம் துவக்க விழா மற்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் தலைமையில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக துவங்கியது.
சென்னை அம்பத்தூர் சோகா இகெதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் திருமதி கண்மணி சுப்பிரமணியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தன்னுரையில், மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் கல்வி கற்றும் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு ) முனைவர் மா விஷ்ணுபிரியா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தன்னுரையில், கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் மட்டுமே ஒரு மனிதன் வெற்றி பெற முடியும் எனவும் மாணவர்களும் தங்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா மாடல் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. எம். எஸ். ராஜபாண்டியன் வருகை புரிந்தார்.
தன்னுரையில், மாணவர்கள் கல்வி அறிவும் கேள்வி அறிவும் மிக்கவராக இருத்தலும், வள்ளுவரின் சொல்படி மாணவர்கள் நடந்து தலைசிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்று உரையாற்றினார்.
அடுத்ததாக, மாணவர் மன்ற செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாணவர் மன்றம் இனிதே துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேது பாஸ்கரா கல்லூரியின் செயலாளர் திரு கந்த பழம் அவர்களும், ஆசிரியை திருமதி பிரேமலதா அவர்களும் ஆசிரியர் திரு ஜான் அவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர். மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment