சாலை பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஊராட்சி செயலர் குடும்பத்திற்கு ஒப்பந்த நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி செயலர் முனீஸ்வரன் சாலை பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சாலையினை அமைத்த விபத்திற்கு காரணமான ஒப்பந்ததாரர்களை கைது செய்திட வலியுறுத்தியும், உரிய இழப்பீடுகள் வழங்கிடக் கோரியும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக சாலை மறியல் போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை எதிரில் நடைபெற்றது.
மேலும் தொடர் சாலை விபத்து ஏற்பட காரணமான பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை தடுப்புகளின்றி ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்ட சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த அரசு ஊழியரின் அனைத்து மருத்துவச் செலவினங்களையும், அவரது குழந்தைகளின் படிப்பு மற்றும் வாழ்வாதாரச் செலவினங்களை இழப்பீடாக சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் ஏற்க வேண்டும், விபத்தில் மரணமடைந்த அரசு ஊழியரின் மனைவிக்கு உடனடியாக ஏதேனும் ஓர் அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இச்சாலை மறியல் போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment