மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமையன்று கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் பள்ளி மாணவச் செல்வங்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவச் செல்வங்கள் கிறிஸ்மஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் வேடம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்கள் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஆகியோர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.
No comments:
Post a Comment