வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்திய தேவர் பேரவையினர்.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 228வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவையின் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு சிங்கத்துரை அவர்களின் தலைமையிலான தேவர் பேரவையின் நிர்வாகிகள் சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அவர்களின் திருஉருவத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் வேலுநாச்சியார் அறக்கட்டளையின் தலைவர் துரை, தமிழ்நாடு தேவர் பேரவையின் தென் மண்டல அமைப்பாளர் சந்தோஷ் குமார், தேவர் பேரவையின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment