அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற்ற தடகளப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி தடகள வீரர்கள் வெற்றி
2024-25 ஆம் ஆண்டிற்கான அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது, இப்போட்டிகளில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி தடகள வீரர்கள் நீளம் தாண்டுதல் , 110 மீட்டர் தடை ஓட்டம் , சங்கிலி குண்டு எறிதல் , 100 மீட்டர் தடை ஓட்டம், போல் வால்டு, 400 மீட்டர் ஓட்டம்,மினி மாரத்தான், 4×100 தொடர் ஓட்டம், 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் போன்ற பிரிவுகளில் பதக்கங்கள் பெற்றனர். மேலும் பெண்களுக்கான ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி பெண்கள் அணியினர் இரண்டாம் இடம் பெற்றனர் . பதக்கம் பெற்றவர்களை அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் அசோக்குமார், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்
No comments:
Post a Comment