மானாமதுரையை அடுத்த ராஜகம்பீரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு சிறுவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த ராஜகம்பீரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்கள் மீது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக வாகன உரிமையாளர் வசிக்கும் அதே தெருவில் வசிப்பவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக பிச்சைபிள்ளையேந்தலை சேர்ந்த ஆண்டிசெல்வம் (19) மற்றும் ராஜகம்பீரத்தை சேர்ந்த முகமது பாரிஸ் ஆசன் (18) ஆகிய இருவரும் சேர்ந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment