மாநில அளவில் நடைபெற்ற 'குண்டான் சட்டி' ஓவியப் போட்டியில் பாபா மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்று சாதனை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் கடந்த வருடம் கார்த்திக் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அவர்களின் புதல்வி பி. கே. அகஸ்தி என்ற 12 வயது குழந்தை 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். அத்திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிளான குண்டான் சட்டி ஓவியப் போட்டியில் பாபா மெட்ரிக் பள்ளியின் மாணவ மாணவிகளும் போட்டியில் பெருந்திரளாக கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாபா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் அவர்களும், நிறுவனர் மற்றும் ஆட்சியர் அவர்களும் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயமும் வழங்கினார்கள். பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment