தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பில் 'யூத் உத்சவ்' நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட நேரு யுவ கேந்திரா இளையோர் வளர்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், ஆனந்தா கல்லூரியின் முதுகலை பிரிவு தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழக என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி ஆகியோர் இணைந்து நடத்தப்பட்ட சிவகங்கை மாவட்ட அளவிலான 'யூத் உத்சவ்' நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment