மகளை அழைத்துச் சென்றுவிட்ட காதலனை தேடி கொலை செய்து கண்மாயில் வீசிய தந்தை மகன் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் மகன் திருக்கண்ணன்(26). இவர் ராமேஸ்வரத்தில் உள்ள சகோதரி முறை கொண்ட முத்திருளாண்டி(49) மகளுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இருவரும் தலைமுறைவாகியுள்ளனர். முத்திருளாண்டி மற்றும் அவருடைய மகன் முத்துமணி(26) ஆகியோருக்கு மதுரை பகுதியில் இவர்கள் இருவரும் இருப்பதாக தகவல் அறிந்து திருக்கண்ணனை கண்டறிந்து அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட திருக்கண்ணன் உடலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த மேலப்பசலை மேம்பாலத்தின் கீழே உள்ள கண்மாயில் டிசம்பர் 10ஆம் தேதி வீசிவிட்டு சென்றுள்ளனர். மானாமதுரை காவல் நிலைய சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றவாளிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். மேலும் முத்திருளாண்டி, முத்துமணி, கருப்புச்சாமி(26) ஆகியோர் சரணடைந்த நிலையில் இவர்களுடன் தொடர்புடையோரையும் கைது செய்த போலீசார், மேலும் இக்கொலைக்கு தொடர்புடையோரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment