மானாமதுரையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் 'சமூக வலைதள பயிற்சி பாசறை' கூட்டம், அமைச்சர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் 'சமூக வலைதள பயிற்சி பாசறை' கூட்டம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கே. என். ஆர். போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், தலைமைக் கழக சமூக வலைதளம் அசோக், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாசனி செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த இளைஞர் அணிகள் நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment