உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக பொறுப்பேற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருமதி தேவி மாங்குடி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக திருமதி தேவி மாங்குடி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் அதிமுக வேட்பாளர் பிரியதர்ஷினியின் வெற்றி செல்லாது என்றும், காங்கிரஸ் வேட்பாளர் திருமதி தேவி அவர்களின் வெற்றி செல்லும் என்ற தீர்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து தேவி அவர்கள் தற்போது பதவி ஏற்றுக் கொண்டார். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற தேவி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி, துணைத் தலைவர் பி. கணேசன் உள்ளிட்ட சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment