சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி வெற்றி பெற்றனர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுப் பரிசுகளை வென்றனர். குழு நடனப்போட்டியில் தொழில் நிர்வாகத்துறை மாணவிகள் பொன்னழகு, பிரியதர்ஷினி, தனலெட்சுமி, கற்பகம், கீர்த்தீகா,அபர்ணா, தனலெட்சுமி, அபிநயா ஆகியோர் முதல் பரிசும், குழுப்பாடல் போட்டியில் ஆங்கிலத்துறை மாணவிகள் விஜி மற்றும் அன்னபூரணி இரண்டாம் பரிசும், பேச்சுப்போட்டியில் தமிழ்த்துறை மாணவி மாதரசி மூன்றாம் பரிசும், தனிப்பாடல் போட்டியில் ஆங்கிலத்துறை மாணவி விஜி முதல் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றுப் பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவியரைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டினார். நுண்கலை மன்றக் குழுவைச் சார்ந்த பேராசிரியர்கள் முனைவர் செல்வமீனா, முனைவர் லெட்சுமணக்குமார், ஷர்மிளா உள்ளிட்டோர் மாணவிகளைப் பாராட்டி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment