சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்டுடியோ* & ஒளிப்பதிவாளர்கள் நல சங்கத்தின் 2023* - 2024ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் காரைக்குடி நகர் சங்கத்தின் மூத்த கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்க பட்டனர்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
மேலும் கல்வி மற்றும் தனித்திறனில் சிறந்து விளங்கும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனர்.
காரைக்குடி நகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
காரைக்குடி நகர் சங்கத்தின் டைரி மற்றும் கேலண்டர் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. காரைக்குடி குளோபல் மெஷின் மருத்துவமனையின் டிரஸ்ட் கார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது. மேலும்
தொழில் சார்ந்த பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்துஇலவச கேமரா சர்வீஸ் முகாமும் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, குளோபல் மிசன் மருத்துவமனை மருத்துவர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்து ராஜன்
No comments:
Post a Comment