சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காணாமல் போன பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் மணிக்கு பாராட்டு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 December 2024

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காணாமல் போன பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் மணிக்கு பாராட்டு.


சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காணாமல் போன பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் மணிக்கு பாராட்டு. 


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லத்தி கிராமம் ராஜேஸ்வரி(65), க.பெ.ஆறுமுகம், என்பவர் இன்று காளையார்கோவில் வாரச்சந்தையில் காய்கறி வாங்கும்போது தனது கட்டைபையை மாற்றி எடுத்து சென்றதாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதுசம்பந்தமாக காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்த நித்தியா(30) என்பவர் காளையார்கோவில் வாரச்சந்தையில் கட்டைப்பையை மாற்றி எடுத்து சென்றதாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேற்படி கட்டைப்பையை கல்லத்தியை சேர்ந்த ராஜேஸ்வரியை என்பவரை காவல் நிலையம் வர வழைத்து காணாமல் போன பணம் ரூ.50,000/- மற்றும் 02 பவுன் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேற்படி நித்தியாவின் நேர்மையை பாராட்டி காயைார்கோவில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad