நாட்டார் கால்வாய் தூம்பை அகற்றிவிட்டு பாலம் அமைக்குமாறு கிராமமக்கள் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேலப்பசலை பஞ்சாயத்திற்குட்பட்ட அரிமண்டபம் கிராமத்திற்கு செல்லக்கூடிய தார் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் புதிய சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரிலும் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இக்குறிப்பிட்ட தார் சாலையானது மானாமதுரையிலிருந்து தீயனூர் வழியாக சேதுராயனேந்தல், அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு வரையில் செல்லும் பிரதான தார் சாலையாகும். தற்போது அரிமண்டபத்தின் அருகே நாட்டார் கால்வாய் வழியாக தண்ணீர் வருவதால் தார் சாலை நடுவில் பாலம் அமைக்காமல் சிறிய தூம்பு இருப்பதால் தண்ணீர் அனைத்தும் சாலையின் மேல் செல்லும் நிலையில் உள்ளதால், அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு பகுதிகள்வரை செல்லக்கூடிய அரசு பேருந்து இயக்க இயலாததால், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் சாலையை உபயோகிக்க முடியாமல் பள்ளி குழந்தைகள், கற்பிணிகள் உள்ளிட்டோர் தவித்து வரும் அவலநிலை தொடர்கிறது.
எனவே உடனடியாக தூம்பால் அமைக்கப்பட்ட பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலத்தை அதே இடத்தில் அமைத்தால் மட்டுமே கிராம பொதுமக்கள் அபாயமின்றி கடந்து செல்ல முடியும் என்ற சூழ்நிலை உள்ளதாலும், தற்போது புதிய சாலை அமைத்துக் கொண்டிருப்பதாலும் இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பொதுமக்கள் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அவசர அவசரமாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தூம்பை அகற்றி புதிய பாலம் அமைத்துத் தருமாறு மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை கிராம பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment