சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் 2024ஆம் வருடத்தின் கடைசி நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாண்புமிகு முன்னாள் பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திரு சதீஷ்குமார் அவர்கள் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அமையவிருக்கும் முகப்பு நுழைவாயில்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் ஒருபுறம் மாண்புமிகு முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரையும், மறுபுற நுழைவாயிலுக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு தா. கிருட்டிணன் அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் 5-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இன்றி பணியில் உள்ள செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருவதாகவும், சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் 108 ஆம்புலன்ஸ் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் சிவகங்கை செல்லும் அவல நிலையை சுட்டுக்காட்டியதோடு, இந்த அவல நிலையை தடுத்து நிறுத்துட உடனடியாக அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகரமன்ற தலைவர் வாயிலாக கேட்டுக்கொண்டார். தொடர்ந்து 5-வது வார்டு நல்லதம்பியார்பிள்ளை தெருவில் இருபுறமும் உள்ள கழிவுநீர் வடிகாலை புணரமைப்பு செய்து தருமாறு நகர மன்ற உறுப்பினர் நகரமன்ற தலைவரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் 19, 21, 23 வது வார்டு பகுதிகளில் மின்விளக்குகள் எரியவில்லை என்ற புகார்களையும் சம்பந்தப்பட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்ட சபையில் முன்வைத்தனர். மானாமதுரை நகர் பாஜக தலைவரும் 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான திரு நமக்கோடி அவர்கள் அரசகுலை மயானத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் தேக்க தொட்டி அமைப்பதை கைவிட வலியுறுத்தி பதாகையை கையில் ஏந்தியவாறு தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment