தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 December 2024

தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது


தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.


தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மாவட்ட தலைவர் தோழர் கோபால் அவர்களின் தலைமையில் சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.


இப்பொதுக்குழுவில் சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் மிக நீண்ட காலமாக பணி புரியும் காப்பாளர்கள், சமையலர்கள், காவலர்கள் மற்றும் ஏவலர்கள் ஆகியோரை கலந்தாய்வு நடத்தி பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் செய்ய வேண்டும். மேலும் கல்லூரி விடுதிகளில் சுழற்சி முறையில் சமையலர்களைப் பணியமர்த்த வேண்டும் எனபது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இதில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சுரேஷ் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். மாவட்ட இணை செயலாளர் தோழர் ராஜேஷ் குமார் வரவேற்புரையும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் கண்ணதாசன் தொடக்கவுரையும் ஆற்றினர். மாவட்ட பொருளாளர் தோழர் இளையராஜா வரவு செலவு அறிக்கையை முன்மொழிந்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தோழர் ராசு மற்றும் தோழர் பூமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


இந்நிகழ்வில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் மாரி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் பூமி ராஜ், தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் பாண்டி ஆகியோர் உரையாற்றினர். 


மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் தோழர் தென்னரசு, தோழர் மாதவன், தோழர் சங்கர், தோழர் தனபால், மாவட்ட இணை செயலாளர்கள் தோழர் முருகன், தோழர் வினோத் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்ட தணிக்கையாளர்கள் தோழர் சிலம்பர மற்றும் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் இராதாகிருஷ்ணன் நிறைவுரையும், தோழர் ராமாயி மாவட்ட மகளிர் அமைப்பாளர் நன்றியுரையும் ஆற்றினர்.

No comments:

Post a Comment

Post Top Ad