புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நாகார்ஜூன் ஷிட்டோ-ரியூ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை.
புது டெல்லியில் நேஷனல் 'கராத்தே பெடரேஷன் ஆப்ஃ இந்தியா' சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டல்கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மாகாலணியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவன் து. ஜெகத் அர்சிக் கலந்து கொண்டு 10 வயது ஆண்கள் கட்டா பிரிவில் முதல் பரிசான தங்கப் பதக்கம் மற்றும் சண்டை பிரிவு 10 வயது 34 கிலோ எடை பிரிவில் முதல் பரிசான தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
அம்மாணவனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி மு. நளமிர்னாலினி 14 வயது பெண்கள் பிரிவு கட்டா பிரிவில் முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் முனைவர் திரு சிவ. நாகர்ஜுன் ஆகியோரை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment