சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டார மின் விநியோகத்தின் கீழ் மானாமதுரையில் உள்ள 110/22 kv திறன் கொண்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பராமரிப்பு பணி காரணமாக அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானாமதுரை நகர் பகுதி மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளான சிப்காட், கீழப்பசலை, தெ. புதுக்கோட்டை, கல்குறிச்சி, கே. கே. பள்ளம், கிழங்காட்டூர், அன்னவாசல், ராஜகம்பீரம், முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், கச்சாத்தநல்லூர், அரிமண்டபம், சங்கமங்கலம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment