பாபா மெட்ரிக் பள்ளியில் உலக சதுரங்க விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த முகேஷ் டொம்மராஜூவிற்கு வாழ்த்து மடல் அனுப்பிய பயிற்சி வீரர்கள்.
18வது உலக சதுரங்க விளையாட்டு சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் விளையாட்டு வீரர் குகேஷ் டொம்மராஜு அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் பாபா மெட்ரிக் பள்ளியின் மூலமாக நடத்தப்படும் விகாஸ் செஸ் அகாடமியில் பயிற்சி பெறும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய வாழ்த்து மடலை அஞ்சல் அட்டைகள் மூலமாக அனுப்பி மகிழ்ந்தனர். இதில் பாபா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் சதுரங்க விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment