மானாமதுரை நகராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டு நகர் மன்ற தலைவர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி வார்டு எண் 5ல் நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்களின் கோரிக்கையை ஏற்று நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் திரு பாலசுந்தர், திமுக நகர கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி ஆகியோர் கழிவு நீர் பிரச்சனை குறித்து வார்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் வார்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி சீர்செய்திட உடனடியாக கழிவு நீர் அகற்றும் வாகனம் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்தி சீர் செய்ய நகர மன்ற தலைவர் உத்தரவிட்டார். மேலும் இக்கழிவுநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வான வேண்டி வடிகாலில் வரும் கழிவுநீரை புதிய சேம்பர் அமைத்து அப்புறப்படுத்த நகராட்சி மூலமாக கட்டுமான வழிவகை மேற்கொள்ள நகராட்சி பொறியாளருக்கு நகர் மன்ற தலைவர் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment