சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக முதலமைச்சரின் மௌனம் கலைக்கும் போராட்டம் மேற்கொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாநில மாநாட்டின் அரைகோல் தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் என் மௌனம் கலைக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிளைத் தலைவர் கருப்பு ராஜா அவர்களின் தலைமையிலும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிளைத் தலைவர் முத்தையா அவர்களின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ச்சியாக சிவகங்கை நகராட்சி அலுவலகம், சிவகங்கை கோட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் மாரி, மாவட்டத் துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட இணைச் செயலாளர் பயாஸ் அகமது, மாவட்ட தணிக்கையாளர்கள் ஜெயபிரகாஷ், கலைச்செல்வி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment