இளையான்குடியில் 'உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்' சார்பாக "கள்ளுக்கான தடையை தமிழ்நாடு அரசு நீக்க" வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றம்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ஏ.எஸ்.வி வளாகத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் 'உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்' சார்பாக "கள்ளுக்கான தடையை நீக்க" தமிழ்நாடு அரசை வலியுறுத்தி 'தமிழ்நாடு பனை - தென்னை மரமேறும் தொழிலாளர் அணியினரின்' கலந்தாய்வு கூட்டம் தோழர் திரு அருள் உயிர் அவர்களின் தலைமையிலும், தோழர் திரு இரக்கனார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் தோழர் சுமன் அவர்கள் சிறப்புரையும், தோழர் அம்புரோஸ் அவர்கள் வரவேற்புரையும், தோழர் அலெக்ஸ் அவர்கள் நன்றியுரையும் ஆற்றினர்.
இந்நிகழ்வில் சாணாரேந்தல், வில்லிசேரி, சேம்பார், சோலையூரணி, உச்சாணி, நகரமங்கலம் அரண்மனை கரை உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, 1. சத்தான உணவுப்பொருட்கள் பணக்காரர்களுக்கு ஆதரவாக, பொய்க் காரணங்களைச் சொல்லி 1987 - முதல் 37 ஆண்டுகளாக, கள் இறக்குவதைத் தடை செய்துள்ள தமிழக அரசை வன்முறையாகக் கண்டிக்கிறோம். ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ள கள் மீதான தடையை நீக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம். 2. தமிழக அரசால் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தடையை நீக்கும்வரை தமிழகத்தின் அனைத்து கிராமசபைகளிலும் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற இங்குள்ள அனைவரும் உறுதி ஏற்கிறோம்.
3. தமிழகத்தின் மாநில மரமாக பனை மரத்தை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பனை மரங்களையும் அதேபோல தென்னை மரங்களையும் பாதுகாத்து தன் கடைமையைச் செய்ய இந்த அவை கேட்டுக்கொள்கிறது. 4.பனை - தென்னை மரங்களின் மூலம் நடைபெறும் கூடை முடைதல், நுங்கு தயாரித்தல், போன்ற அனைத்து பாதுகாக்கவும், மேம்ப்படுத்தவும், சர்பத் துணைத்தொழில்கள்களைப் அவற்றை நவீனப்படுத்தி சந்தைப்படுத்தவும் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்படி இந்த அவை தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
5. கள் இறக்குபவர்களின் மீது தமிழகக் காவல்துறையால் சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகளையும், பொய் வழக்குகளையும் அம்பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து ஊடகங்களும் முன்வந்து எடுக்கும்படி அனைத்து அச்சு மற்றும் ஒளி - ஒலி ஊடகங்களை இந்த அவை கேட்டுக்கொள்கிறது.
6. பனை - தென்னை மரமேறும் தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கான நவீன அறிவியல் உபகரணங்களை அரசு மற்றும் தனியார் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க அவர்களுக்கு ஊக்கம் வழங்கும்படி மத்திய - மாநில அரசுகளை இந்த அவை கேட்டுக்கொள்கிறது. 7. கள் இறக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்க்கான தொழிலன்று; மாறாக சங்க காலம் தொட்டு இன்று வரை அது எந்த சமூகமும் செய்ய இயலும் தொழிலே; அதன் பயன்கள் அனைத்துச்சமுகங்ககளையும் சென்றடைவதால் சமுகங்ககளும், அனைத்து தரப்பினரும் பனை - அனைத்து தென்னை தொழிலாளர்களுக்காகப் போராடவும் துணை நிற்கவும் இந்த அவை கேட்டுக்கொள்வதாக கோரப்பட்டது.
மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கள்ளுக்கு அனுமதி. தமிழகத்தில் மட்டும் தடை ஏன்? அரசு மரமாகப் பனை மரத்தை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அம்மரத்தின் மூலம் நடைபெறும் முதன்மைத் தொழிலைத் தடை செய்வதேன்? 4.2 விழுக்காடு ஆல்கஹாலைக் கொண்டுள்ள கள்ளுக்குத் தடை விதித்து, 42.8 விழுக்காடு ஆல்கஹாலைக் கொண்டுள்ள சீமை மது வகைகளை அரசே வெட்கமின்றி விற்பது ஏன்?
கள்ளில் கலப்படம் என்று குற்றம் சாட்டும் தமிழக அரசு, கலப்படம் செய்யப்படும் பால், அரிசி போன்ற உணவுப் பொருள்களையும் தடை செய்யுமா? ஒரு கோடிப் பேர் ஈடுபடும் ஒரு தொழிலைத் தடைசெய்து, வேலை வாய்ப்பின்மையைத் தமிழ்நாடு அரசு அதிகரிப்பது ஏன்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்து இக்கலந்தாய்வு கூட்ட அவையின் மூலமாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment