காரைக்குடி மாநகராட்சி நிதி-நிலை எப்போது சரியாகும்?
மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் அதிர்ச்சி.
சிவகங்கை டிச 28
காரைக்குடி மாநகராட்சியின் நிதிநிலை சரியில்லை என்று ஆணையாளர் மற்றும் மேயர்
மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சில் கூட்டத்தில் கூறியதை எடுத்து
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாநகராட்சியும் காரைக்குடி மாநகராட்சியும் தான் கடைசி நிலையில் இருக்கிறது என்று சொன்னதை அடுத்து
மேலும் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்நிலையில் நிதிநிலை சரியானதும்,
காரைக்குடி மாநகராட்சியில் அதிக அளவிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
மாநகராட்சி பகுதியில் வரும் 58 கிலோமீட்டர் நீளத்துக்கு
சாலைகள் அனைத்தும் செட் பண்ணிடப்படும் என்றும் அறிவித்தனர்.
இதனால் ஓரளவுக்கு அனைவரும் சமாதானம் அடைந்தனர்.
நிதிநிலை சரியில்லாததால் வார்டு பணிகளுக்கு டெண்டர் வைக்கவே இல்லை.
மேலும் ஆணையாளரும் பதிலளித்ததால் மன்றமே அதிர்ச்சி அடைந்தது. அப்படியானால் தமிழக அரசு திவாலாகி விட்டதா என்று ஒரு மாமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதும்,
மன்றத்தில் கூச்சல் குழப்பமும் நிலவியது.
காரைக்குடி மாநகராட்சி கவுன்சில் கூட்டம்
மேயர் எஸ்.முத்துதுரை தலைமையில் நடைபெற்றது.
ஆணையாளர் சித்ரா துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வார்டு வாரியாக கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை முறையிட்டனர்.
உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment