காளையார் கோவிலில் புதுமைப்பெண் திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கிய அமைச்சர்.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழக அரசின் உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 பெறுவதற்கான இரண்டாம் கட்ட திட்ட விரிவாக்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் புனித ஜான் மைக்கேல் கல்லூரியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவியர்களுக்கு மாதம் ரூபாய் 1000 பெறுவதற்கான வங்கி கணக்கு அட்டைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் திரு தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள், சமூக நல அலுவலர்கள்,கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment