தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சிவகங்கை மாவட்ட செயலாளர் பங்கேற்பு.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15ம் மாநில மாநாடு தூத்துக்குடியில் நிறைவுபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பினை மீள வழங்குதல் உள்பட, பறிக்கப்பட்ட உரிமைகளை மீள வழங்க வேண்டும் எனவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மெளனத்தை கலைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 1. 27.12.2024 தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம், 2. 06.01.2025 முதல் 10.01.2025 வரை உறுப்பினர் சந்தா சேர்ப்பு (ம) பிரச்சார இயக்கம், 3. 10.02.2025ல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 24 மணிநேர தர்ணா, 4. 25.02.2025ல் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம், 5. 19.03.2025ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், 6. கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டல் காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட முன்னெடுப்பை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment