மானாமதுரையில் "சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்", விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 December 2024

மானாமதுரையில் "சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்", விழிப்புணர்வு பிரசார ஊர்வலம்


மானாமதுரையில் "சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்", விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிவகங்கை மாவட்டம் சார்பாக "சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம்" என்கிற மக்களிடம் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு வீரையா அவர்களின் தலைமையில் பழைய பேருந்து நிலையம் தொடங்கப்பெற்று நடைபெற்றது. 


இப்பேரணியானது பழைய பேருந்து நிலையம் தொடங்கி, ஸ்டேட் பாங்க், அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக அணிவகுத்து நகராட்சி அலுவலகம் வரை நடைபயணமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் மானாமதுரை திமுக நகர் கழக செயலாளர் க‌. பொன்னுசாமி துவக்க உரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறப்பு பேச்சாளர் மாநில இலக்கிய அணி துணை தலைவர் சிவகங்கை மாவட்ட துணை தலைவர் டாக்டர் கவிஞர் திரு அப்பச்சிசபயதி சிறப்புரை ஆற்றினார். நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. 


மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி/தோழமை கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர ஒன்றிய, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாணவரணி, இளைஞர் அணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு, "எல்லோர்க்கும் வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதற்காக படிக்கிறோம் வேலை செய்கிறோம். மாண்புடன் வாழ போராடுகிறோம். இதில் எங்கே வந்தது சாதி. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இல்லை. அடுத்து உணவுக்கும், வட்டிக் கடனுக்கும் இடையில் அல்லல் படுகிறவர்களின் சாதி எது? குடியிருக்கு பத்துக்கு பத்து சதுர அடி நிலம் இல்லாத கோடிக் கணக்கானவர்களின் சாதி எது? தலைமுறை தலைமுறையாக நிலத்தில் உழைத்து கிடந்தாலும் கால் காணி நிலத்தை சொந்தமாக்க முடியாதவர்களின் சாதி எது? அதுதான் ஏழை சாதி. 


இந்திய நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் அதானி, அம்பானி உள்ளிட்ட 5 முதலாளிகளின் கையில் இந்தியாவின் செல்வத்தில் 20% இருக்கிறது. மறுபுறம் உயரம் குறைந்த மனிதர்கள் எடை குறைந்த குழந்தைகள், இரத்த சோகை உள்ள பெண்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது ஒன்றிய அரசுக்கு கவலையாக இல்லை. இந்த அநீதிகளை மக்கள் ஒன்றுபட்டு எதிர்க்கக்கூடாது என்பதற்காக சாதி, மதம் என்று மனிதர்களை பாகுபாடுபடுத்தி பிரித்து வைக்கிறார்கள். 


சாதியின் பெயரில் எத்தனை அவதிப்புகள், எத்தனை மோதல்கள், எத்தனை தீ வைப்புகள், எத்தனை உயிர் பறிப்புகள், இன்னும் இக்கொடுமைகள் தொடரக்கூடாது. மனிதர்களாக ஒன்றுபடுவோம். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கிற, மனிதனை மனிதன் மதிக்கிற, ஒரு சமத்துவ சமூகத்தை கட்டி எழுப்புவோம்! இந்த சாதியை தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்" என்கிற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad