சட்டமேதை அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சரை வன்மையாக கண்டித்து மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரை பாராளுமன்ற அவையில் அவமதித்த பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வன்மையாக கண்டித்து மானாமதுரை திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் நகர் கழக செயலாளர் க. பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட, நகர், ஒன்றிய, பேரூர், ஊராட்சிகளை மற்றும் வார்டுகளை சேர்ந்த அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment