அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு
அழகப்பா பல்கலைக்கழகத்தின் மகளிரியல் ஆய்வு மையம் மற்றும் பாலின வெற்றியாளர் சங்கத்தின் (Gender Champion Club) சார்பாக மாணவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் படி பாலின வெற்றியாளர் சங்கத்தின் சார்பாக 2023-24 கல்வி ஆண்டில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் அதிகமான நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்தியதற்காக அழகப்பா அரசு கலைக்கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது . இப் பயிற்சிக் கூட்டத்தில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி அருள் ஜெனீசியஸ், மற்றும் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி குளோரோபில் பேகம் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பினைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்ற மாணவிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டி வாழ்த்தினார். அழகப்பா அரசு கல்லூரியின் பாலின வெற்றியாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபாராணி, மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமளவல்லி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment