அரணையூர் கிராம பொதுமக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
இளையான்குடி வட்டம் அரணையூர் கிராம கண்மாய்க்கு வரும் கால்வாயினை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடங்களை அப்புறப்படுத்தி தருமாறு அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததால் அரணையூர் கிராம பொதுமக்கள் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் அக்கிராம பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர் தங்கராசு, சிவகங்கை மானாமதுரை கட்சி மாவட்ட பொருளாளர் திசை கர்ணன், நகரகுடி பாலா மற்றும் கிராம நிர்வாக தலைவர்கள் உள்ளிட்டோர் வட்டாட்சியர் அவர்களிடம் உரிய விளக்கங்களை அளித்தனர்.
மேலும் நாளை பிற்பகல் 12 மணிக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வட்டாட்சியர் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment