அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக நடைபெற்ற ஒன்றிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன் துவக்க உரையும், சிபிஐயின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சத்தையா அவர்கள் வாழ்த்துரையும் ஆற்றினர்.
இம்மாநாடு கூட்டத்தில் மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து போதுமான மருத்துவர்களை பணியமர்த்தி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், முறையான துப்புரவு பணியாளர்களை நியமித்து நோயாளிகள் உள்ள வார்டுகளை சுத்தம் செய்து நோயாளிகளுடன் துணை வரும் நபர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு முறையான கட்டிடம் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் எம் மாநாட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு சங்கையா, மாவட்ட குழு முத்துராமலிங்கம் மற்றும் முருகேசன், மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அடியாக்கி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் என் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் நியமனமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment