மணல்மேடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கே. பெத்தனேந்தல் ஊராட்சியில் உள்ள மணல்மேடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பன்னீர், கிளைச் செயலாளர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் கோபி, கணக்கங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், கிளைச் செயலாளர் பிச்சை, மணல்மேடு கிளைச் செயலாளர் நாச்சி அம்பலம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம், கிராம வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment