மானாமதுரை ஊராட்சி ஒன்றியங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் சி. கரிசல்குளம் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட கண்மாய் கழுங்குமடையினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக புதிய கழுங்குமடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுத்துறை அலுவலர்களை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மேலப்பசலை ஊராட்சி அரிமண்டபம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலையினை நேரில் சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அப்பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கு அரசுத்துறை அலுவலர்களிடம் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, கிளைச் செயலாளர் சடையப்பன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment