சிவகங்கையில் அண்ணல் அம்பேத்கர் மீது இழிவான கருத்தை பதிவு செய்த உள்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸார் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய திருநாட்டின் அரசியலமைப்பின் தந்தை சமத்துவம் மற்றும் சமூக நீதியின் அடையாளமாக போற்றப்படும் மதிப்பிற்குரிய டாக்டர் அண்ணல் பி. ஆர். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் மீது இழிவான கருத்துக்களை மக்களவையில் பதிவு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்க மன்னிப்பும் கேட்கவும், அமைச்சரவையிலிருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவரின் இத்தகைய இழிவான பேச்சை திசை திருப்பும் நோக்கத்தில், பாராளுமன்றத்தின் பிரதான எதிர்கட்சித் தலைவர் மற்றும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி அவர்களின் மீது அவதூறு மற்றும் பொய் குற்றச்சாட்டை சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ள எதேச்சதிகார பாசிச ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் அறிவுறுத்துதலை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிவகங்கை அரண்மனை வாசல் எதிரில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையிலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி அவர்களை முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, வட்டார, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளில் உள்ள மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மைத்துறை காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சேவாதளம், எஸ்.சி/எஸ்.டி பிரிவு காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் கமிட்டிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment