மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பரிசுகளை வாரிக் குவித்த பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.
'தமிழ்நாடு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் மதுரையில் உள்ள மங்கையர்கரசி கல்லூரியில் நடைபெற்றது. இச்சாம்பியன்ஷிப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் பாபா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 67 மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
இதில் மொத்தமாக ஒன்பது 6 வயது குழந்தைகளும், பதினான்கு 7 வயது குழந்தைகளும், பத்து 8 வயது குழந்தைகளும், எட்டு 9 வயது குழந்தைகளும், எட்டு 10 வயது குழந்தைகளும், 11 வயது குழந்தைகள் 6 பேர், 12 வயது குழந்தைகள் 6 பேர், 13 வயது குழந்தைகள் 4 பேர் மற்றும் 14 வயது குழந்தைகள் 2 பேர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தாங்கள் கலந்து கொண்ட போட்டிகளில் முதல் 3 பரிசுகளை தட்டிச்சென்றனர்.
முதல் பரிசை பள்ளி நிறுவனர், இரண்டாம் பரிசை பள்ளியின் தாளாளர், மூன்றாம் பரிசை பள்ளி ஆட்சியர் ஆகியோர் வழங்க மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் அவர்கள் பரிசுகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment