மானாமதுரையில் குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டியால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு இரண்டரை லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட புதிய நீர்தேக்க தொட்டி அரசகுழி மயான குப்பைகிடங்கில் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குடிநீர் விநியோக நீர் சேர்க்க தொட்டியானது குப்பை கிடங்கின் அருகே அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீர் மாசு ஏற்படுவது உறுதி என்பதால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், நகராட்சி ஆணையர் தலையிட்டு தகுந்த தீர்வு காண வேண்டி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment