மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நில அளவை களப்பணியாளா்கள் 9 அம்ச கோாிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட தலைவா் திரு கோ. வேல்முருகன் அவர்களின் தலைமையிலும், மாவட்ட செயலாளா் திரு க. காா்த்தி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. தொடர்ச்சியாக மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவை களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். மூன்று கட்ட இயக்க நடவடிக்கைகளில் முதலாவது நடவடிக்கையான உள்ளிருப்பு போராட்டம் திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
நில அளவை அலுவலர்கள் வலியுறுத்தப்படும் கோரிக்கைகள் பின்வருமாறு, 1. களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட, 2. தரமிறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை மீள வழங்கிட, 3. ADOS-ன் அதிகார பறிப்பை கைவிட, 4. சிறப்பு திட்ட மனுக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கிட, 5. நில எடுப்பு திட்டப் பணிகளில் பதவி உயர்வு வழங்கிட, 6. பொது மாறுதலில் அரசாணை எண் 10-ஐ உறுதி படுத்திட, 7. புல உதவியாளர்கள் நியமனத்தில் வெளி முகமை ஒப்பந்த முறையை ஒழித்து கால முறை ஊதியத்தில் பணியமர்த்திட, 8. ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட. 9. நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் வருகிற 19ஆம் தேதி ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டமும், அதனைத் தொடர்ந்து 22/01/25 முதல் 23/01/25 வரை 48 மணி நேர வேலை நிறுத்தமும் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற இப்போராட்டத்தில் அனைத்து களப்பணியாளா்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment