மேலப்பசலை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பசலை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிராம பொதுமக்களுக்கு தேவைப்படும் உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன், கிளைச் செயலாளர் சடையப்பன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இப்பகுதியில் நீர்ப்பாசன கண்மாய் உடைந்து கிராமத்தில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment