திருப்பாச்சேத்தி பச்சேரியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் அவர்களின் தந்தையின் நினைவு தினம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வட்டம் பச்சேரி கிராமத்தை சேர்ந்த அருள்மிகு கள்ளழகர் பாலிடெக்னிக் நிறுவனரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் திரு சி. ஆர். சுந்தர்ராஜன் அவர்களின் தந்தை தெய்வத்திரு சி. ரெத்தினம் பிள்ளை அவர்களின் 31-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பச்சேரி கிராமத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment