காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காரைக்குடி மாநகர காங்கிரஸ் வார்டு நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கு. டி. குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட மாநகர வட்டார நகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment