துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு இளையான்குடியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி கிழக்கு ஒன்றியம் சூராணம் புனித ஜேம்ஸ் தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இளையான்குடி தெற்கு ஒன்றியம் வடக்கு சாலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் இளையான்குடி தெற்கு ஒன்றியம் பஞ்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
தொடர்ச்சியாக இளையான்குடி தெற்கு ஒன்றியம் சீவலாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள், இளையான்குடி மேற்கு ஒன்றியம் பிராமணக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளையான்குடி தெற்கு ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொற்கோ, ஒன்றிய கவுன்சிலர் செழியன், ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியதாஸ், மாவட்ட பிரதிநிதி கண்ணன், முத்துக்குமார், குருசாமி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கிளை செயலாளர் போஸ், தகவல் தொழில் நுட்ப அணி அரோன்கிங், பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி எலிசபெத்ராணி, குழந்தை செல்வங்கள், ஆசிரிய பெருமக்கள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment