இளையான்குடி சீத்தூரணி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள சீத்தூரணி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் பிரச்சனை மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார்.
இந்நிகழ்வில் மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கட்சி நிர்வாகிகள், அரசு துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment