சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி உபகரணங்களை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்.
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி உபகரணங்களான 1. மூன்று சக்கர சைக்கிள், 2. பிரெய்லி கைகடிகாரம், 3. பார்வையற்றோருக்கான நவீன வாசிக்கும் கருவி, 4. முழங்கை தாங்கி, 5. தோளதாங்கி, 6. காதொலி கருவி ஆகிய உதவி உபகரணங்கள் பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையத்தின் மூலம் பதிவுசெய்து பதிவு ஒப்புகை சீட்டு மற்றும் பிற ஆவணங்களுடன் பிரதி திங்கள் கிழமைதோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment