மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.
மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் 53 வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு புருஷோத்தமன் அவர்களின் தலைமையில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி அவர்கள் கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக காந்தி சிலை அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ யோக கணபதி ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு து. ஜ. பால் நல்லதுரை, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் அண்ணா, கிழக்கு வட்டார தலைவர் காசிராமலிங்கம், நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment