சிவகங்கை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 November 2024

சிவகங்கை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்.

 



சிவகங்கை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்.


தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். 


இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, மாவட்ட கழக துணைச் செயலாளர் த. சேங்கைமாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ. பாலுமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளா பாலசுந்தர், நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) புவனேஸ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) விஜய சரவணகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) செந்தில்குமரன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி, மகளிர் அணி துணை அமைப்பாளர் ஒமேகா திலகவதி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தனசேகரன், கிழங்காட்டூர் கிளைச் செயலாளர் சடையப்பன், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad