தொடர் சர்ச்சையில் இளையான்குடி கண்மாய்கரை கழிவறை, பெண்கள் பாதுகாப்பு, தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் நடைபெற்ற திட்ட பணிகள் குறித்து இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்த பெரியசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு மூலமாக கோரப்பட்ட கேள்விகளுக்கு இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பதில் அறிக்கை அளித்துள்ளார்.
அம்மனுவில் கேட்கப்பட்ட கேள்விகள் பின்வருமாறு, இளையான்குடி கண்மாய்கரை நீர்த்தேக்க தொட்டியின் அருகில் கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு திட்ட மதிப்பீடு எவ்வளவு, முழுத் தொகையும் திட்டத்திற்கு விடுக்கப்பட்டதா என்கிற விவரம், கழிவறைக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதா, அதன் திட்ட மதிப்பு எவ்வளவு, கழிவறை எத்தனை இருக்கைகளைக் கொண்டது, கழிவறையின் மொத்த பரப்பளவு, கண்மாய்கரை கழிவறை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதா, கழிவறைக்கான தண்ணீர் வசதி எவ்வாறு வழங்கப்படுகிறது, இளையான்குடி பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் திட்ட மதிப்பீடு விபரம், சீத்தூரணி சாலையில் பழைய ஐஓபி/ பழைய ஐசியூபி அருகில் உள்ள காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையின் திட்ட மதிப்பீடு, தண்ணீர் வசதி மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதா, கன்மார்க்கரையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்குமாறு கட்டப்பட்டுள்ளதா உள்ளிட்ட 8 கேள்விகளை மனுவில் கோரப்பட்டிருந்தது.
அம்மனுவிற்கு செயல் அலுவலரின் பதில்கள் பின்வருமாறு, இளையான்குடி வார்டு எண் 17 கண்மாய்கரை மற்றும் வார்டு எண் 16 பஜார் தெருவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவறையின் மதிப்பீடு ரூபாய் 15 லட்சம் எனவும், ஒப்பந்ததாரருக்கு முழு தொகையும் வழங்கப்பட்டது எனவும், கழிவறைக்கு தனியாக ஆழ்துளை கிணறு அமைக்கப்படாமல் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் மூலமாக கழிவறைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது எனவும், போதிய இடவசதி இல்லாததால் இரண்டு இருக்கைகள் கொண்ட கழிவறையாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இளையான்குடி பழைய பேருந்து நிலையத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளையான்குடி பழைய ஐஓபி/ பழைய ஐசியுபி வங்கி அருகில் மட்டும் கண்மாய்க்கரை அருகிலும் உள்ள கழிவறை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என செயல் அலுவலர் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில் கண்மாய்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெகு நாட்களாக கொண்டுவரப்படாத நிலையில், கழிவறையின் விபர பலகையில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடு தொகையும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக போதிய இடவசதி இல்லாத சூழ்நிலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவுரையானது பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லாத வகையில் குறிப்பாக கழிவறையின் இருக்கை கதவுகள் வெட்ட வெளியாக எல்லோராலும் கூர்ந்து கவனிக்க கூடிய வகையில் எந்த ஒரு மறைவுமின்றி பெண்கள் கழிவறையை உபயோகப்படுத்த அச்சப்படும் விதத்திலும், முகம் சுளிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே உடனடியாக தொடர் சர்ச்சைக்களுக்கு உள்ளாகி வரும் கண்மாய்கரை கழிவறைக்கு தீர்வு காண வேண்டி பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment