அரசு ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திட அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும், சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக வலியுறுத்தல்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மையம் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் SMC மூலமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியை திருமதி இரமணி அவர்கள் வகுப்பறையிலேயே கொலை வெறி பிடித்த காட்டுமிராண்டியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை வன்மையாகக் கண்டித்தும், கொலையாளி மதன்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினர். மேலும் 'அன்று ஆசிரியர் உமாமகேஸ்வரி இன்று ஆசிரியர் இரமணி படுகொலை', தொடரும் ஆசிரியர்கள் மீதான அநீதிக்கு எதிராக ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment