அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட சிறுபான்மை துறைக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட சிறுபான்மை துறைக்கான புதிய நிர்வாகிகள் நியமனமானது மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை சேர்மன் திரு இம்ரான் பிரதாப் கார்கி அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுபான்மை துறைக்கான புதிய நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அத்துறையின் சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த திரு பால் நல்லதுரை அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்களின் ஒப்புதலோடும், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களின் பரிந்துரையின் பேரிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை தலைவர் திரு முகமது ஆரிப் அவர்களின் உத்தரவின் பேரிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment