மானாமதுரை நகர் பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் அட்டூழியங்கள், இன்னும் எவ்வளவு காலம் இந்த அவல நிலையை சகித்துக் கொள்வது என பொதுமக்கள் கேள்வி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பிரதான நகர் பகுதிகளில் தெரு நாய்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என பொதுமக்கள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று வியாழக்கிழமை வார சந்தை என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் சந்தைக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் நிலையில், சாலையில் கேட்பாரற்று சுற்றிக்கொண்டுள்ள இத்திரு நாய்கள் பொதுமக்களை குறிப்பாக பெண்களை அச்சுறுத்தி வருகிறது.
அலைகடலென திரண்டு சுற்றித் தெரியும் இந்த தெரு நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களை எதிர் நோக்காமல் பயந்தும், அச்சப்பட்டும் வீட்டிற்கு வாங்கி செல்லும் சந்தை பொருட்களோடு பொதுமக்கள் சாலையில் தவறி கீழே விழுகின்றனர் மற்றும் நாய்கள் தொல்லை செய்து விரட்டுவதால் பயத்தில் அலறி அடித்து ஓடவும் செய்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் வந்தாலே உயிரை கையில் பிடித்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த அவல நிலையிலிருந்து தாங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பல மாதங்களாக பல செய்திகளை வெளியிட்ட பின்னரும் இதற்கான தீர்வு இன்று வரை எட்டப்படாதது பொதுமக்களிடம் மிகுந்த வேதனை ஏற்படுத்தி உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இத்தெரு நாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment