மானாமதுரை சமத்துவபுரம் பகுதியில் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்து திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் செய்ககளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் பகுதி திட்ட பயனாளி பெருமக்களுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் லூயிஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா, மேற்பார்வையாளர் தங்கம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செங்கிஸ்கான், அங்கன்வாடி பணியாளர்கள், திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment